பிரபல நடிகர் டாம் ஹாங்ஸின் ஹாலிவுட் படம் இணையத்தில் ரிலீஸ்


பிரபல நடிகர் டாம் ஹாங்ஸின் ஹாலிவுட் படம் இணையத்தில் ரிலீஸ்
x
தினத்தந்தி 22 May 2020 12:49 PM IST (Updated: 22 May 2020 12:49 PM IST)
t-max-icont-min-icon

பிரபல நடிகர் டாம் ஹாங்ஸின் ஹாலிவுட் படம் இணையத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.


கொரோனா வைரஸ் உயிர்ப்பலிகளை வாங்குவதோடு உலகம் முழுவதும் திரை உலகையே புரட்டி போட்டுள்ளது. ஏராளமான ஹாலிவுட் படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஆஸ்கார் விருது போட்டிக்கு இணையதளத்தில் வெளியாகும் படங்கள் தேர்வு செய்யப்படும் என்று அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் பாரஸ்ட்ஹம்ப், சேவிங் பிரைவேட் ரியான், பிக், தி டாவின்சி கோட், டாய் ஸ்டோரி, கேப்டன் பிலிப்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் தயாராகி உள்ள ‘கிரேஹவுண்ட்’ திரைப்படத்தை தியேட்டருக்கு பதிலாக நேரடியாக இணையதளத்தில் ரிலீஸ் செய்கின்றனர்.

இரண்டாம் உலகப்போரை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகளை முடித்து அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பல மாதங்கள் ஆகியும் அடங்காமல் கோரத் தாண்டவம் ஆடுவதால் கிரேஹவுண்ட் படத்தை அனைத்து நாடுகளிலும் திரையரங்குகளில் ஒரே நேரத்தில் வெளியிட சாத்தியம் இல்லை என்று படக்குழுவினர் கருதினர்.

இதையடுத்து டிஜிட்டல் தளத்தில் வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள். முன்னணி ஹாலிவுட் நடிகர் படம் டிஜிட்டல் தளத்தில் வெளியாவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை ஆரோன் ஷினீடர் இயக்கி உள்ளார்.

Next Story