சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் சம்மதம் நடிகர்கள்-இயக்குனர்களுக்கு சதவீத அடிப்படையில் சம்பளம்


சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் சம்மதம்  நடிகர்கள்-இயக்குனர்களுக்கு சதவீத அடிப்படையில் சம்பளம்
x
தினத்தந்தி 22 May 2020 9:54 PM GMT (Updated: 22 May 2020 9:54 PM GMT)

படத்தை வியாபாரம் செய்த பின்னர், அதில் கிடைக்கும் பணத்தை சதவீத அடிப்படையில் தயாரிப்பாளர், நடிகர். நடிகைகள், இயக்குனர்கள் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் முடங்கி உள்ளது. இதனால் நடிகர்கள் பலர் சம்பளத்தை குறைத்துள்ளனர். இந்த நிலையில் படத்தை வியாபாரம் செய்த பின்னர், அதில் கிடைக்கும் பணத்தை சதவீத அடிப்படையில் தயாரிப்பாளர், நடிகர். நடிகைகள், இயக்குனர்கள் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனை சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் ஏற்றுள்ளனர். இதுகுறித்து பிரபல வினியோகஸ்தரும், தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள ஆடியோவில் பேசி இருப்பதாவது:-

கொரோனா காலத்தில் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜனிடம் பேசியபோது சில ஆலோசனைகள் சொன்னார். உடனே தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியை தொடர்பு கொண்டு, தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், இயக்குனர்களுக்கு சதவீத அடிப்படையில் சம்பளம் கொடுக்க முயற்சி எடுக்கலாம் என்று கூறினேன். அவர் சம்மதித்தார்.

ஒரு கதையை தேர்வு செய்து சத்யராஜிடம் பேசினோம். அவர் நடிக்க சம்மதித்தார். இதுபோல் கே.ஏஸ்.ரவிக்குமாருக்கும் கதை பிடித்தது. இருவரும் சதவீத அடிப்படையில் சம்பளம் வாங்க ஒப்புக்கொண்டனர். இந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்க பார்த்திபன், விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டனர். 200 பேர் சேர்ந்து தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

படம் ரூ.10 கோடிக்கு வியாபாரம் ஆனால் அதற்கு ஏற்றவாறு சதவீத அடிப்படையில் பிரித்து கொடுக்கப்படும். இனிமேல் நடிகர்கள், இயக்குனர்கள் சதவீத அடிப்படையில்தான் சம்பளம் வாங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story