சினிமா செய்திகள்

பிரபல நடிகர் மரணம் + "||" + Death of famous actor

பிரபல நடிகர் மரணம்

பிரபல நடிகர் மரணம்
பிரபல இந்தி நடிகர் மோகித் பஹேல் மரணமடைந்தார்.

திரையுலகின் இளம் நடிகர் மோகித் பஹேல். இவர் சல்மான்கான், அசின் நடித்துள்ள ரெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். காலி காலி சோர் ஹே, ஜபாரியா ஜோடி, உவா, மிலன் காக்கீஸ் உள்ளிட்ட மேலும் பல படங்களில் நடித்துள்ளார். ராணி முகர்ஜி, சயீப் அலிகான் நடிப்பில் தயாராகி வரும் பண்டீ அவுர் பப்ளி 2 படத்துக்கும் ஒப்பந்தம் செய்து இருந்தனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கொரோனா ஊரடங்கினால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

மோகித் பஹேலுக்கு சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றார். தற்போது ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் மதுராவுக்கு சென்று இருந்தார். அங்கு திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 26.

மோகித் பஹேலுடன் ஜபாரியா ஜோடி படத்தில் நடித்துள்ள நடிகை பிரனீதி சோபரா தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் திறமையான நடிகர். பழக இனிமையானவர். எப்போதும் உற்சாகமாக நேர்மறை எண்ணங்களுடன் இருப்பார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திர நீதிபதி கொரோனாவால் டெல்லியில் மரணம்
ஆந்திர நீதிபதி கொரோனாவால் டெல்லியில் மரணம்.
2. விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு - கமல்ஹாசன்
விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று நடிகரும், மக்கள்நீதிமய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
3. வீரபாண்டி தொகுதி சுயேச்சை வேட்பாளர் மரணம்
வீரபாண்டி தொகுதி சுயேச்சை வேட்பாளர் நேற்று மரணம் அடைந்தார்.
4. பிரபல நடிகர் மரணம்
பிரபல மலையாள நடிகர் பி.பாலச்சந்திரன் மரணம் அடைந்தார்.
5. பிரபல டைரக்டர் மரணம்
பிரபல மலையாள டைரக்டர் டி.எஸ்.மோகன் மரணம் அடைந்தார்.