சினிமா செய்திகள்

நடிகர் சூர்யாவுக்கு காயம் + "||" + Actor Surya injured

நடிகர் சூர்யாவுக்கு காயம்

நடிகர் சூர்யாவுக்கு காயம்
நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்பத்திரியில் கை விரலில் மருந்து வைத்து கட்டு போடப்பட்டது.
சென்னை,

நடிகர் சூர்யா கொரோனா ஊரடங்கினால் வீட்டில் இருக்கிறார். அவருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாக இணையதளத்தில் தகவல் பரவியதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விசாரித்தபோது சூர்யா தரப்பில், “வீட்டுக்குள்ளே இருக்கும் ஜிம்மில் தினமும் சூர்யா உடற்பயிற்சிகள் செய்து வருகிறார். உயரத்தில் தொங்கி உடற்பயிற்சி செய்தபோது திடீரென்று கை பிசகியது. இதனால் அவரது கையில் அடிபட்டது. விரலில் காயம் ஏற்பட்டது” என்றனர். ஆஸ்பத்திரியில் கை விரலில் மருந்து வைத்து கட்டு போடப்பட்டது. இதையடுத்து உடற்பயிற்சியை தற்காலிகமாக நிறுத்தி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். சூர்யாவுக்கு ஏற்பட்ட காயம் குணமாக பிரார்த்திப்பதாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.


சூர்யா சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். ஊரடங்கு முடிந்ததும் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் வந்துள்ளன. மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள். அருவா படத்தில் சூர்யா ஜோடியாக ராஷிகன்னா நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.