லாக் டவுனில் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய நடிகை ஸ்ரேயா


லாக் டவுனில் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய நடிகை ஸ்ரேயா
x
தினத்தந்தி 26 May 2020 7:19 AM GMT (Updated: 2020-05-26T12:49:49+05:30)

லாக் டவுனில் ரசிகர்களுக்கு நடிகை ஸ்ரேயா அறிவுரை வழங்கி உள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதனை தொடர்ந்து அவர் தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரெளத்ரம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 

இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதனிடையே பிரபல தொழிலதிபருமான ஆன்ட்ரே கோஷ்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பிறகு ஸ்ரேயா கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார்.  இவர், லாக்டவுன் சமயத்தில் ஜாலியாக நேரம் செலவழித்து வருகிறார்.

தற்போது சில தளர்வுகள் உள்ளதால், வெளியே சுற்றும் அவர்கள், பாதுகாப்பாக இருக்க சமூகவலைதளங்களில் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.


Next Story