சினிமா செய்திகள்

என் வாழ்க்கையில் மிகச்சிறந்த இரு வருடங்கள் இவை தான் - பிரியங்கா சோப்ரா + "||" + priyankachopra 2 years ago today we took our very first picture togethe

என் வாழ்க்கையில் மிகச்சிறந்த இரு வருடங்கள் இவை தான் - பிரியங்கா சோப்ரா

என் வாழ்க்கையில் மிகச்சிறந்த இரு வருடங்கள் இவை தான் - பிரியங்கா சோப்ரா
என் வாழ்க்கையில் மிகச்சிறந்த இரு வருடங்கள் இவை தான் என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
லண்டன்,

தமிழில் விஜய் ஜோடியாக அறிமுகமாகி இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த பிரியங்கா சோப்ராவுக்கும், அவரை விட 10 வயது குறைந்தவரான அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோனசுக்கும் ஜோத்பூரில் திருமணம் நடந்தது. கிறிஸ்தவ முறைப்படியும் ஹிந்து முறைப்படியும் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளார்கள்.


இந்நிலையில் இரு வருடங்களுக்கு முன்பு முதல்முறையாகச் சந்தித்துகொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டார்கள். அந்த நாள் முதல் எல்லையில்லா மகிழ்ச்சியை எனக்கு அளித்துள்ளீர்கள் என்று பிரியங்காவும் என் வாழ்க்கையில் மிகச்சிறந்த இரு வருடங்கள் இவை என்று நிக் ஜோனாஸும் உருக்கமாகப் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.  நான் உன்னை நேசிக்கிறேன்  நிக் ஜோனாஸ் என் வாழ்க்கையை மிகவும் நம்பமுடியாததாக மாற்றியமைக்கு நன்றி என பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பிரியங்கா சோப்ரா கணவரின் கைக்கடிகாரம் ரூ.7 கோடி
பிரியங்கா சோப்ரா கணவரின் கைக்கடிகாரம் ரூ.7 கோடி மதிப்பிலானது என்று தகவல் வெளியாகி உள்ளது.
2. மெட் காலா நிகழ்ச்சி: பிரியங்கா சோப்ராவிற்கு மேக்கப் போட்ட சிறுமி
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது வீட்டிலேயே மெட் காலா பேஷன் நிகழ்ச்சியை சிறுமியை வைத்து சிம்பிளாக நடத்தியுள்ளார்.