சினிமா செய்திகள்

தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி ஜோதிகா படம் இணைய தளத்தில் நாளை ரிலீஸ் + "||" + Jodhika movie released tomorrow

தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி ஜோதிகா படம் இணைய தளத்தில் நாளை ரிலீஸ்

தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி ஜோதிகா படம் இணைய தளத்தில் நாளை ரிலீஸ்
தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி ஜோதிகா படம் இணைய தளத்தில் நாளை ரிலீஸ் ஆக உள்ளது.

ஜோதிகா நடித்துள்ள புதிய படம் பொன்மகள் வந்தாள். இதில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை சூர்யா தயாரித்துள்ளார். பொன்மகள் வந்தாள் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக இணைய தளத்தில் வெளியிடுகிறார்கள்.

இதனை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்த்தனர். ‘’பொன்மகள் வந்தாள் படத்தை ‘ஒடிடி’ தளத்தில் வெளியிட்டால் இனி அவர்கள் தயாரிக்கும் படங்களையும் சூர்யாவின் சூரரை போற்று உள்ளிட்ட அவர்கள் தொடர்புடைய படங்களையும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய மாட்டோம்‘’ என்றும் எச்சரித்தனர். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோதிகா படத்தை இணைய தளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி பொன்மகள் வந்தாள் படம் நாளை (29-ந்தேதி) இணைய தளத்தில் வெளியாகிறது. இந்த பிரச்சினை குறித்து ஜோதிகா கூறும்போது, ‘’கொரோனாவால் மட்டுமே இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுகிறோம். கொரோனா பிரச்சினை முடிந்ததும், நிறைய கதாநாயகர்கள் படங்கள் தியேட்டர்களில் ரிலீசாக காத்து இருக்கிறது. அப்படி இருக்கும்போது பொன்மகள் வந்தாள் படத்தை வெளியிடுவதற்கு 2 வருடங்கள் ஆகி விடும். அதனால்தான் இணைய தளத்தில் வெளியிடுகிறோம்‘’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. சுருக்கு வலையில் மீன்பிடிக்க எதிர்ப்பு; 2 மீனவர் கிராமத்தினர் மோதல் கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு
சுருக்கு வலையில் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து வீராம்பட்டினம், வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் மோதிக்கொண்டதில் கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த 30 பயணிகள் தனியார் ஓட்டலில் தங்க பொதுமக்கள் எதிர்ப்பு
சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த 30 பயணிகளை தனியார் ஓட்டலில் தங்க வைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
3. கொரோனா தொற்று பரவுவதால் ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது
கொரோனா தொற்று பரவுவதால் ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. கிராம மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
4. தற்கொலை செய்த கல்லூரி மாணவியின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு கவுரவக்கொலை என காதலன் பரபரப்பு புகார்
புதுக்கோட்டை அருகே தற்கொலை செய்த கல்லூரி மாணவியின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது. அவரை கவுரவ கொலை செய்திருக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டிடம் காதலன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
5. கரைவெட்டி சரணாலய ஏரியில் பறவைகள் திட்டு அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
கரைவெட்டி பறவைகள் சரணாலய ஏரியில் பறவைகள் திட்டு அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.