வெட்டுக்கிளிகள் விவகாரம்: மீம்ஸ் பசங்க ஐடியா உள்ள பசங்க - நடிகர் விவேக் பாராட்டு


வெட்டுக்கிளிகள் விவகாரம்: மீம்ஸ் பசங்க ஐடியா உள்ள பசங்க - நடிகர் விவேக் பாராட்டு
x
தினத்தந்தி 29 May 2020 1:32 PM GMT (Updated: 2020-05-29T19:02:12+05:30)

மீம்ஸ் பசங்க ஐடியா உள்ள பசங்க என நடிகர் விவேக் பாராட்டி உள்ளார்.

சென்னை,

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு மற்றொரு தலைவலியாக மாறியுள்ளது

இந்தியாவில் கடந்த ஆண்டும் வெட்டுக்கிளிகள் அட்டகாசம் இருந்தாலும், இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பல்வேறு மாநிலங்களுக்கு படையெடுத்துவருகின்றன.

உழவனுக்கு நண்பனாக திகழும் பூச்சி, புழு இனங்கள் உண்டு. ஆனால் வெட்டுக்கிளிகள் விவசாயிகளின் வாழ்வுக்கு வேட்டு வைக்கிறது. இவை கூட்டமாக படையெடுத்து மின்னல் வேகத்தில் பயிர்களை தாக்கி அழித்து விடும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினை மட்டுமின்றி, மக்களுக்கு உணவு பஞ்சத்தையும் ஏற்படுத்தி விடுகிறது, இந்த அபாயகரமான வெட்டுக்கிளிகள்.

பல்வேறு நாடுகள் இந்த பூச்சியினத்தால் பெரிதளவு பாதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் சமீப நாட்களாக பயிர்களை தின்று சேதம் விளைவித்த வெட்டுக்கிளிகள் மராட்டியத்துக்குள் கொத்து, கொத்தாக படையெடுத்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இந்நிலையில் வெட்டுக்கிளிகளை வைத்து பலரும் மீம்ஸ் உருவாக்கி வருகின்றனர். அதில் நடிகர் விவேக் ரன் படத்தில் நடித்த காட்சியை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் அவருக்கு கண்ணுக்கு தென்பட, அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஒரு படத்தை வச்சிக்கிட்டு என்னவெல்லாம் சொல்றீங்க. யாரை எல்லாம் ஓட்டுரீங்க. மீம்ஸ் பசங்க ஐடியா உள்ள பசங்க" என்று பாராட்டியுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில் உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை! வாழ்க அவர் நகைச்சுவைப் பணி என பதிவிட்டுள்ளார்.

Next Story