கைக்குட்டையில் மேலாடை: இளம் நடிகையை விமர்சித்த ரசிகர்கள்


கைக்குட்டையில் மேலாடை: இளம் நடிகையை விமர்சித்த ரசிகர்கள்
x
தினத்தந்தி 30 May 2020 12:35 AM GMT (Updated: 30 May 2020 12:35 AM GMT)

கைக்குட்டையில் மேலாடை அணிந்த இளம் நடிகையை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

நடிகைகள் கவர்ச்சி உடையில் பொது விழாக்களில் பங்கேற்பதையும் நீச்சல் உடை புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஏற்கனவே இதனை விமர்சித்து இருந்தார். நிகழ்ச்சியொன்றில் அவர் பேசும்போது நடிகைகளுக்கு எந்த விதமான உடைகள் அணிய வேண்டும் என்று தெரியவில்லை.

உடம்பை காட்டும் உடை அணிந்தால்தான் கதாநாயகர்களும் இயக்குனர்களும் வாய்ப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறார்களோ? என்று கண்டித்தார். இந்த நிலையில் பிரிதிவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிபர், துல்கர் சல்மானுடன் கம்மட்டி பாடம் உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ள இளம் நடிகையான ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்தனர். அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சிலர் பாராட்டியும் கருத்து பதிவிடுகின்றனர். இந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.

Next Story