அழகானவர் இல்லை என்று விமர்சனம்: பூஜா ஹெக்டேவுடன் சமந்தா மோதல்?


அழகானவர் இல்லை என்று விமர்சனம்: பூஜா ஹெக்டேவுடன் சமந்தா மோதல்?
x
தினத்தந்தி 30 May 2020 12:47 AM GMT (Updated: 2020-05-30T06:17:49+05:30)

அழகானவர் இல்லை என்று விமர்சனம் செய்த நடிகை பூஜா ஹெக்டேவுடன் சமந்தா மோதல் விவகாரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.


மிஸ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தில் பிரபலமான பூஜா ஹெக்டேவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தாவின் புகைப்படம் வெளியிடப்பட்டு இவர் அப்படி ஒன்றும் அழகானவர் இல்லை என்று பதிவிடப்பட்டு இருந்தது.

இதனால் சமந்தா ரசிகர்கள் கொந்தளித்தனர். சமந்தாவை அழகில்லை என்று கூறியதற்காக பூஜா ஹெக்டே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினர். மன்னிப்பு கேள் என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கினார்கள். இது பட உலகில் பரபரப்பை எற்படுத்தியது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை சிலர் முடக்கி விட்டதாகவும் தொழில்நுட்ப குழுவினர் அதை மீட்கும் முயற்சியில் உள்ளனர் என்றும் டுவிட்டரில் புஜா ஹெக்டே தெரிவித்து இருந்தார். இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியாகும் தகவல்கள் எதையும் ஏற்க வேண்டாம் என்றும் தெளிவுபடுத்தினார். சமந்தாவை அழகானவர் இல்லை என்று பதிவிட்டதை மறைக்கவே தனது இன்ஸ்டாகிராம் முடக்கப்பட்டு விட்டதாக பூஜா ஹெக்டே பொய் சொல்கிறார் என்று ரசிகர்கள் கண்டித்தனர். பூஜாவின் செயல் சமந்தாவுக்கும் ஆத்திரத்தை எற்படுத்தி உள்ளது. அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமந்தா வெற்றி சின்னத்தை காட்டியபடி மேக்கப் போடாத தனது புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Next Story