சினிமா செய்திகள்

1500 பேருக்கு வங்கி கணக்கில் பணம் போட்ட அக்‌ஷய்குமார் + "||" + Akshay Kumar has deposited money in bank accounts for 1500 people

1500 பேருக்கு வங்கி கணக்கில் பணம் போட்ட அக்‌ஷய்குமார்

1500 பேருக்கு வங்கி கணக்கில் பணம் போட்ட அக்‌ஷய்குமார்
நடிகர் அக்‌ஷய்குமார் 1500 பேருக்கு அவர்களது வங்கி கணக்கில் பணம் போட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் ஊரடங்கை மீறி நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் வருமானம் இன்றி பலர் கஷ்டப்படுகின்றனர். திரைப்பட தொழிலாளர்களும் அவதிப்படுகிறார்கள். மத்திய மாநில அரசுகள் இதற்காக நிதி திரட்டுகின்றன. ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான முன்னணி இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் ஏற்கனவே கொரோனா ஒழிப்புக்கான பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கினார்.

இதுபோல் மும்பை போலீசாருக்கு ரூ.2 கோடியும் மும்பை மாநகராட்சிக்கு ரூ.3 கோடியும் வழங்கி இருந்தார். தற்போது ஊரடங்கினால் படப்பிடிப்பு இல்லாமல் வருமானம் இன்றி கஷ்டப்படும் சினிமா கலைஞர்களுக்கு வங்கி கணக்கில் பணம் போட்டு இருக்கிறார். மொத்தம் 1500 பேர் வங்கி கணக்கில் தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.45 லட்சம் செலுத்தி உள்ளார்.

இதுகுறித்து மும்பையில் உள்ள சினிமா மற்றும் டி.வி நடிகர்கள் சங்கத்தின் இணை செயலாளர் அமித் பேஹல் கூறும்போது, எங்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு உதவும்படி அக்‌ஷய்குமாரிடம் கோரிக்கை வைத்தோம். உடனடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தினார். மேலும் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா உணர்த்திய பாடம் பணம், சொத்துக்கள் மகிழ்ச்சியை தராது -நடிகை ராஷி கன்னா
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ள ராஷி கன்னா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது.
2. திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் துணிகரம்: கோவில் நிர்வாகி வீட்டில் 100 பவுன் நகைகள், ரூ.35 லட்சம் கொள்ளை - பொன்னமராவதியில் 5 பேர் சிக்கினர்
திண்டுக்கல் அருகே கோவில் நிர்வாகி வீட்டுக்குள் புகுந்து 100 பவுன் நகைகள், ரூ.35 லட்சத்தை காரில் வந்த மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. அவர்களில் 5 பேர் பொன்னமராவதியில் சிக்கினர். பட்டப்பகலில நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
3. ஏழைகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்துங்கள்: மத்திய அரசுக்கு, ராகுல் காந்தி கோரிக்கை
விவசாயிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழைகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்துமாறு மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்து உள்ளார்.
4. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 13 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. மத்திய அரசு மக்களுக்கு பணத்தை வழங்குவதற்கு பதிலாக அவர்களிடம் இருந்து பணத்தை எடுக்கிறது - ப.சிதம்பரம்
மத்திய அரசு, மக்களுக்கு பணத்தை வழங்குவதற்கு பதிலாக அவர்களிடம் இருந்து பணத்தை எடுப்பதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.