முதன்முதலாக தெலுங்கு படத்தில், அப்புக்குட்டி!


முதன்முதலாக தெலுங்கு படத்தில், அப்புக்குட்டி!
x
தினத்தந்தி 30 May 2020 11:25 PM GMT (Updated: 2020-05-31T04:55:46+05:30)

முதன்முதலாக தெலுங்கு படத்தில், நடிகர் அப்புக்குட்டி நடிக்க உள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர், அப்புக்குட்டி. நகைச்சுவை நடிகராக, குணச்சித்ர நடிகராக, கதைநாயகனாக என பல படங்களில் நடித்து வந்த அவர், முதன்முதலாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார். அவர் கூறியதாவது:

‘’தெலுங்கு பட உலகுக்கு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிறேன். நான் நடித்த ‘வாழ்க விவசாயி’ படம் வெளிவர வேண்டியிருக்கிறது. அந்த படம் எப்போது வெளியானாலும் கொண்டாடப்படும். படம் வெளியாகும் நாளுக்காக காத்திருக்கிறேன். இதையடுத்து வெட்டிப்பசங்க, பரமகுரு, வல்லவனுக்கு வல்லவன், பூம்பூம் காளை, வைரி, ரூட்டு, இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு போன்ற படங்களில் நடித்து வருகிறேன். சோதனையான கொரோனா காலகட்டத்தை கடந்து விட்டால், திரையுலகில் சுபிட்சம் ஏற்படும். நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என்கிறார், அப்புக்குட்டி!

Next Story