ரஜினிகாந்தை அடுத்து பிரகாஷ்ராஜ்!


ரஜினிகாந்தை அடுத்து பிரகாஷ்ராஜ்!
x
தினத்தந்தி 30 May 2020 11:34 PM GMT (Updated: 2020-05-31T05:04:56+05:30)

ரஜினிகாந்தை அடுத்து பிரகாஷ்ராஜ் டிஸ்கவரி சேனலில் கலந்து கொண்டிருக்கிறார்.


சில மாதங்களுக்கு முன், ‘டிஸ்கவரி சேனலில்’ ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் கலந்து கொண்டார். தற்போது அதே டி.வி. நடத்தும் மற்றொரு நிகழ்ச்சியில், வர்ணனையாளராக பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டிருக்கிறார். ‘வைல்ட் கர்நாடகா’ என்ற நிகழ்ச்சிக்கு பிரகாஷ்ராஜ் குரல் கொடுக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகிறார்:

‘’ஒரு அர்த்தமுள்ள பயணம். இயற்கையின் குரலாக மாறப்போகிறேன். இதற்கு முன் இல்லாத அளவுக்கு மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய இந்திய வன வாழ்க்கையின் ஆவண படம், அது. அதை தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தொகுத்து வழங்கியதை பெருமையாக உணர்கிறேன்” என்கிறார், பிரகாஷ்ராஜ்!

Next Story