சினிமா செய்திகள்

மீண்டும் கனிகா! + "||" + Again Kanika!

மீண்டும் கனிகா!

மீண்டும் கனிகா!
மீண்டும் நடிகை கனிகா நடிக்க வந்துள்ளார்.

வரலாறு, எதிரி, பைவ் ஸ்டார் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த கனிகா, சில வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இப்போது அவர் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். முன்பு போலவே கதாநாயகியாக நடிக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட அவர், குணச்சித்ர வேடங்களில் நடிக்க தயாராக வந்து இருக்கிறார்.

அவர் மறுபிரவேசம் செய்யும் படத்தின் பெயர், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்.’ இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். கனிகா, இலங்கை அகதியாக நடிக்கிறார். படத்தை டைரக்டு செய்பவர், வெங்கட கிருஷ்ண ரோஹந்த்.