சினிமா செய்திகள்

டைரக்டர் விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்தது + "||" + Director Vijay has a boy baby

டைரக்டர் விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்தது

டைரக்டர் விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்தது
டைரக்டர் விஜய்க்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது.

கிரீடம், பொய் சொல்லப்போறோம், மதராசபட்டினம், தாண்டவம், தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், விஜய். இவர், பட அதிபர் ஏ.எல்.அழகப்பனின் மகன். இவருக்கும், டாக்டர் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ந் தேதி திருமணம் நடந்தது.

அதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பமாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வேதனை ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று பகல் 11.25 மணி அளவில் ஐஸ்வர்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் டைரக்டர் விஜய் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மனைவி-மகனை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூரு தனியார் மருத்துவமனையில் நடிகை மேக்னா ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்தது
பெங்களூரு தனியார் மருத்துவமனையில், நடிகை மேக்னா ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிரஞ்சீவி சர்ஜா மறுபிறவி எடுத்திருப்பதாக குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.