சினிமா செய்திகள்

1 லட்சம் முருக பக்தர்கள் தயாரிக்கும் பக்தி படம்! + "||" + Devotional film made by 1 lakh Murukan devotees!

1 லட்சம் முருக பக்தர்கள் தயாரிக்கும் பக்தி படம்!

1 லட்சம் முருக பக்தர்கள் தயாரிக்கும் பக்தி படம்!
1 லட்சம் முருக பக்தர்கள் சேர்ந்து பக்தி படம் ஒன்றை தயாரிக்க உள்ளனர்.

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பக்தி படங்கள் எடுப்பது மிகவும் குறைந்து வருகிறது. மிக நீண்ட இடைவெளிக்குப்பின், நயன்தாரா கதைநாயகியாக நடிக்கும் ஒரு பக்தி படம், ‘மூக்குத்தி அம்மன்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்த நிலையில், ‘அரோகரா’ என்ற பெயரில் மேலும் ஒரு பக்தி படத்துக்கு பூஜை போடப்பட்டுள்ளது.

இது, முருக கடவுளை பற்றிய பக்தி படம். ஒரு லட்சம் முருக பக்தர்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். ‘தொட்ரா’ என்ற படத்தை இயக்கிய டி.மதுராஜ் டைரக்டு செய்கிறார். புதுமுகங்களுடன் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நடைபெற இருக்கிறது. படத்தை பற்றி டைரக்டர் டி.மதுராஜ் கூறுகையில், ‘’1980, 2000, 2020 என மூன்று காலகட்டங்களில் நடப்பது போல் பக்தியுடன் திகில் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. நவபாசானா சிலை பற்றியும், அதன் மகிமைகள் பற்றியும், அதன் பின்னணியில் உள்ள மர்மங்கள் பற்றியும் இந்த படம் பேசும்‘’ என்கிறார்.