சினிமா செய்திகள்

சூரரைப் போற்று திரையரங்கில் வெளியாகுமா? - ரசிகரின் கேள்விக்கு நடிகர் சூர்யா பதில் + "||" + Do you like the sun and release it in the theater? Actor Surya's answer to the fan's question

சூரரைப் போற்று திரையரங்கில் வெளியாகுமா? - ரசிகரின் கேள்விக்கு நடிகர் சூர்யா பதில்

சூரரைப் போற்று திரையரங்கில் வெளியாகுமா? - ரசிகரின் கேள்விக்கு நடிகர் சூர்யா பதில்
சூரரைப் போற்று திரையரங்கில் வெளியாகுமா? என்று ரசிகரின் கேள்விக்கு நடிகர் சூர்யா பதில் அளித்துள்ளார்.
சென்னை,

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தநிலையில், சூரரைப் போற்று திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கில் தான் முதலில் வெளிவரும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் சூரரை போற்று தமது மனதுக்கு நெருக்கமான படங்களில் ஒன்று என  குறிப்பிட்டார்.

திரையரங்கில் படத்தை பார்க்கும் அனுபவம் போல் வேறு எதிலும் கிடைக்காது என்று சுட்டிக்காட்டிய சூர்யா,தமது படம் கண்டிப்பாக திரையரங்கில் வெளியான பின்பு தான், ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று உறுதியளித்தார்.