சினிமா செய்திகள்

சினிமா பட‌ப்பிடிப்பிற்கும் அனுமதி அளியுங்கள் - முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம் + "||" + Grant permission for cinematography - Director Bharathiraja's letter to the Chief Minister

சினிமா பட‌ப்பிடிப்பிற்கும் அனுமதி அளியுங்கள் - முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம்

சினிமா பட‌ப்பிடிப்பிற்கும் அனுமதி அளியுங்கள் - முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம்
சினிமா பட‌ப்பிடிப்பிற்கும் அனுமதி அளியுங்கள் என்று முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,

சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்துள்ளதை போல சினிமா பட‌பிடிப்பிற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இயக்குநர் பாரதிராஜா முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடித‌த்தில்,  படிப்படியாக அன்றாட வாழ்வை மீட்டுகொண்டிருக்கும் முதலமைச்சருக்கும் பாராட்டுகள். விதிகள் தளர்த்தி சின்னத்திரை பட‌ப்பிடிப்பிற்கு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் திணறி வருகின்றனர்.


பலர் உணவுக்கே வழியின்றி சிரம படுகின்றனர், முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்டமுடியாமல் திணறுகின்றனர். எனவே சினிமா படபிடிப்பிற்கும், அனுமதி அளிக்க வேண்டும். அரசு வரையறுக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடிப்போம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.