55 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்


55 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்
x
தினத்தந்தி 7 Jun 2020 6:21 AM IST (Updated: 7 Jun 2020 6:21 AM IST)
t-max-icont-min-icon

55 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பக்தி பாடல் ஒன்றை பாடினார்.


“தாயே கருமாரி..,” “கற்பூரநாயகியே கனகவள்ளி..” போன்ற காலத்தால் அழிக்க முடியாத பக்தி பாடல்களை பாடியவர், எல்.ஆர்.ஈஸ்வரி. சினிமா பின்னணி பாடகி பி.சுசீலாவின் சமகால பாடகி, இவர். ‘நடிகர் திலகம்‘ சிவாஜிகணேசன் நடித்த ‘சிவந்த மண்‘ படத்தில் இவர் பாடிய “பட்டத்து ராணி பார்க்கும் பார்வை..,“ ‘பட்டிக்காடா பட்டணமா‘ படத்தில், “கேட்டுக்கோடி உருமி மேளம்” ஆகிய பாடல்கள் தலைமுறைகளை தாண்டி, இப்போதும் காதுகளை குளிர்விக்கின்றன.

வருடங்கள் பல தாண்டி ஓடினாலும், எல்.ஆர்.ஈஸ்வரியின் உற்சாகம் கலந்த இனிய பாடல்களை மறக்க முடியாது. மூத்த பாடகியான இவர், இளைய தலைமுறை பாடகிகளுக்கு வழிவிட்டு, சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

55 வருடங்களுக்குப்பின் அவர், ‘மூக்குத்தி அம்மன்‘ என்ற பக்தி படத்துக்காக ஒரு பாடலை பாடியிருக்கிறார். “மூக்குத்தி அம்மனுக்கு பொங்கல் வைப்போம்...வேப்பிலை ஏந்தி வந்து வரம் கேட்போம்“ என்ற அந்த பாடலை பா.விஜய் எழுதியிருக்கிறார். தேவா இசையமைத்து இருக்கிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில், மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி டைரக்டு செய்து இருக்கிறார்.

Next Story