சினிமா செய்திகள்

கமல் பட தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி + "||" + Corona kills kamal film producer

கமல் பட தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி

கமல் பட தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி
கமல் பட தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலியானார்.

பிரபல இந்தி பட தயாரிப்பாளர் அனில் சூரி கொரோனாவுக்கு பலியானார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77.

இதுகுறித்து அனில் சூரியின் சகோதரரும் தயாரிப்பாளருமான ராஜீவ் சூரி கூறும்போது, ‘’காய்ச்சல் சளியால் அவதிப்பட்ட அனில் சூரியை மும்பையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் 2 மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து விட்டன. இதையடுத்து இன்னொரு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் பலன் இன்றி இறந்து போனார்“ என்றார். மறைந்த அனில் சூரி இந்தியில் கமல்ஹாசன், சுனில்தத், ஹேமமாலினி நடித்த ‘ராஜ் திலக்‘ படத்தை தயாரித்தவர். அமிதாப்பச்சன் நடித்த மன்ஸில், ராஜ்குமார், ரேகா ஜோடியாக நடித்த கர்ம யோகி, ராஜேஷ் கன்னா, ஜிதேந்திரா நடித்த பெகுனாஸ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். அவரது மறைவுக்கு இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓமனில் ஒரே நாளில் 330 பேருக்கு கொரோனா 3 பேர் பலி
ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 330 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.22 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8.77 கோடியாக உயர்ந்துள்ளது.
3. மராட்டிய மந்திரி சகன் புஜ்பாலுக்கு கொரோனா
மராட்டிய மந்திரி சகன் புஜ்பாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் பாதிக்கப்பட்ட 7-வது மந்திரி இவர் ஆவார்.
4. கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: சார்ஜாவில் ஹைபர் மார்க்கெட், சலூன் கடைக்கு சீல் பொருளாதார மேம்பாட்டுத்துறை நடவடிக்கை
கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: சார்ஜாவில் ஹைபர் மார்க்கெட், சலூன் கடைக்கு சீல் பொருளாதார மேம்பாட்டுத்துறை நடவடிக்கை.
5. ஓமனில், கொரோனாவால் கடந்த 3 நாட்களில் 868 பேர் பாதிப்பு பலி எண்ணிக்கை 1500-ஐ கடந்தது
ஓமனில், கொரோனாவால் கடந்த 3 நாட்களில் 868 பேர் பாதிப்பு பலி எண்ணிக்கை 1500-ஐ கடந்தது.