சினிமா செய்திகள்

கொரோனா ஊரடங்கில் சூர்யா படம் தணிக்கை + "||" + Surya film censor board at Corona curfew

கொரோனா ஊரடங்கில் சூர்யா படம் தணிக்கை

கொரோனா ஊரடங்கில் சூர்யா படம் தணிக்கை
கொரோனா ஊரடங்கில் சூர்யா படம் தணிக்கை செய்யப்பட்டது.

சூர்யாவின் ‘சூரரை போற்று‘ படபிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து திரைக்கு வர தயாரான நிலையில் கொரோனா ஊரடங்கினால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. படத்தின் டிரெய்லர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் பாடல் வெளியீட்டு விழாவை நடத்தினர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் சூரரை போற்று படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். தணிக்கையில் படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்து இருப்பதாக படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

கொரோனா ஊரடங்கில் தணிக்கையான முதல் தமிழ் படம் இதுவாகும். சூரரை போற்று படம் ஆகஸ்டு மாதம் சுதந்திர தினத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சூர்யா ஜோடியாக அபர்ணா முரளி நடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கி உள்ளார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரித்த பொன்மகள் வந்தாள் படத்தை இணைய தளத்தில் வெளியிட்டதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சூர்யா படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்றும் அறிவித்து உள்ளனர். அவர்களை சமரசப்படுத்தும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா ஊரடங்கு: வெளிநாடுகளில் தவித்த அப்பாவிகளை தங்க கடத்தலில் ஈடுபடுத்திய கும்பல்; அதிகாரிகள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்
கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் தவித்த அப்பாவி தொழிலாளர்களை தங்க கடத்தலில் கும்பல் ஈடுபடுத்திய திடுக்கிடும் தகவல் கிடைத்து உள்ளது.
2. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் 254 விமானங்கள் இயக்கம்; 30 ஆயிரம் பேர் பயணம்
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக நேற்று சென்னை விமான நிலையத்தில் 254 விமானங்கள் இயக்கப்பட்டன. இவற்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
3. கல்லூரி இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச.7ம்தேதி தொடங்க அனுமதி: தமிழக அரசு
டிசம்பர் 14 ஆம் தேதி முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
4. தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழக அரசின் பணிகள் எதுவும் தடைபடக் கூடாது என்பதற்காக சண்முகத்தின்பதவிக்காலம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.
5. ரெஜினாவின் கொரோனா ஊரடங்கு அனுபவம்
நடிகை ரெஜினா தனது கொரோனா ஊரடங்கு அனுபவம் பற்றி விளக்குகிறார்.