டைரக்டர் பாலமித்ரன் திடீர் மரணம்


டைரக்டர் பாலமித்ரன் திடீர் மரணம்
x
தினத்தந்தி 11 Jun 2020 12:56 AM GMT (Updated: 11 Jun 2020 12:56 AM GMT)

டைரக்டர் பாலமித்ரன் சென்னையில் மரணமடைந்தார்.


டைரக்டர் பாலா என்ற பாலமித்ரன் சென்னையில் மரணம் அடைந்தார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வாத நோய் பாதிப்பும் இருந்தது. சிகிச்சை எடுத்துக்கொள்ள பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார். இதையடுத்து சினிமா டைரக்டர்கள் சங்கம் மூலமாக காட்டங்குளத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பாலமித்ரனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஆனாலும் பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45. பாலமித்ரன் இயக்குனர் சுகி மூர்த்தியிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், கள்வர்கள், உடுக்கை ஆகிய படங்களை இயக்கி உள்ளார். கள்வர்கள் படத்தில் கவுசல்யா, ரேகா, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் திரைக்கு வர தயாராக உள்ளது. உடுக்கை படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கிய நிலையில் கொரோனா ஊரடங்கு முடக்கி போட்டது. இன்னும் 5 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது. ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருந்த அவர் திடீரென்று மரணம் அடைந்தது படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மரணம் அடைந்த பால மித்ரனுக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். அவரது உடல் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story