சினிமா செய்திகள்

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார் + "||" + Famous film cinematographer Kannan has passed away

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்
இயக்குநர் பாரதிராஜாவுடன் 40க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பி.கண்ணன் காலமானார்.
சென்னை,

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனர் பாரதிராஜாவுடன் 40க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவருமான பி.கண்ணன் காலமானார். அவருக்கு வயது 69. புகழ்பெற்ற இயக்குநர் பீம்சிங்கின் மகனும் எடிட்டர் லெனினின் சகோதரருமான கண்ணன், தமிழ்த் திரையுலகின் முன்னனி ஒளிப்பதிவாளராக அறியப்பட்டவர்.


50க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ள கண்ணன், பாரதிராஜா இயக்கிய 40 படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். இதனால் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகப் புகழ் பெற்றார்.

பாரதிராஜாவின் கண்கள் என வர்ணிக்கப்பட்ட இவர் 2015 முதல் பாஃப்டா திரைப்பட கல்வி நிலையத்தில் ஒளிப்பதிவு பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் வடபழனி தனியார் மருத்துவமனையில் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்த கண்ணன், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.