கொரோனாவுக்கு பயந்து சுருதிஹாசன் ஐதராபாத்தில் குடியேறினாரா?


கொரோனாவுக்கு பயந்து சுருதிஹாசன் ஐதராபாத்தில் குடியேறினாரா?
x
தினத்தந்தி 14 Jun 2020 4:51 AM IST (Updated: 14 Jun 2020 4:51 AM IST)
t-max-icont-min-icon

தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ள சுருதிஹாசன் சில வருடங்களுக்கு முன்பு மும்பையில் குடியேறினார். அங்கிருந்தே படங்களிலும் நடித்து வந்தார்.

தமிழ் படங்களில் நடிப்பதற்காக அவ்வப்போது சென்னை வந்து விட்டு படபிடிப்பு முடிந்ததும் மும்பை சென்று விடுவதை வழக்கமாக வைத்து இருந்தார். மும்பையில் தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. தினமும் ஏராளமானோருக்கு நோய் தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதனால் பிரபலங்கள் அங்கு வசிக்க அச்சப்படுகின்றனர். நடிகர் நடிகைகள் மும்பையை காலி செய்து விட்டு நகருக்கு வெளியே உள்ள பண்ணை வீடுகளில் குடியேறி உள்ளனர். நடிகர் சல்மான்கானும் பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார். இதுபோல் நடிகை சுருதிஹாசனும் கொரோனா அச்சத்தால் மும்பையில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் பரவி வருகிறது.

மும்பையில் இருந்து அவர் சென்னை வர முடிவு செய்ததாகவும் ஆனால் சென்னையிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாவதால் ஐதராபாத்துக்கு சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் ஆந்திரா, தெலுங்கானாவில் சினிமா படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதித்து இருப்பதால் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக அவர் ஐதராபாத் சென்று இருக்கிறார் என்று நெருக் கமானவர்கள் கூறுகிறார்கள்.

Next Story