சினிமா செய்திகள்

மொட்டை மாடியில், சீதா தோட்டம்! + "||" + On the terrace The Actress Seetah Garden

மொட்டை மாடியில், சீதா தோட்டம்!

மொட்டை மாடியில், சீதா தோட்டம்!
முன்னாள் கதாநாயகி சீதா இப்போது, அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். இங்கே (தமிழ் பட உலகில்) அம்மா வேடத்துக்கு போட்டி இருப்பதால் அவர் தெலுங்கு, மலையாள படங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கிறார்.
சீதாவுக்கு சென்னை சாலிகிராமம், கிழக்கு கடற்கரை சாலை, போரூர் ஆகிய இடங்களில் சொந்தமாக பங்களாக்கள் உள்ளன. அந்த பங்களாக்களை படப்பிடிப்புக்காக வாடகைக்கு விட்டு இருக்கிறார். சாலிகிராமம் பங்களாவின் மொட்டை மாடியில் இயற்கை விவசாய தோட்டம் அமைத்து, காய்கறிகளை பயிரிட்டு இருக்கிறார்.


வீட்டு சமையலுக்கு அந்த காய்கறிகளையே அவர் பயன்படுத்துகிறாராம்!