சினிமா செய்திகள்

‘லேப்’பில் உருவான கொரோனா வைரஸ்? நடிகை ரைசா கோபம் + "||" + Lab evolved The coronavirus virus Actress Raisa is angry

‘லேப்’பில் உருவான கொரோனா வைரஸ்? நடிகை ரைசா கோபம்

‘லேப்’பில் உருவான கொரோனா வைரஸ்? நடிகை ரைசா கோபம்
கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடிகை ரைசா வில்சனும் இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
சீனாவில் உள்ள விலங்குகள் இறைச்சி சந்தையில் இந்த வைரஸ் உருவாகி இருக்கலாம் என்று கூறப்பட்டது. அங்குள்ள பரிசோதனை கூடத்தில் இருந்து வெளியாகி இருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு உள்ளது. நடிகை ரைசா வில்சனும் இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளார். இவர் தனுசின் வேலை இல்லா பட்டதாரி படத்தில் நடித்தவர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதையடுத்து பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். கொரோனா பற்றி ரைசா கூறியதாவது:-


“நான் வேலையை தொடங்க விரும்புகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். ஆனால் கொரோனா இருக்கிறதே? இந்த வைரஸ் இங்கு ஒரு காரணமாகத்தான் வந்து இருக்கிறதா? அதை யாரேனும் உள்நோக்கத்தோடு பரப்பினார்களா? இதில் இருந்து மீண்டு வர இன்னும் என்னவெல்லாம் நாம் செய்ய வேண்டி இருக்கிறதோ? ஊரடங்கை என்னால் கையாள முடியவில்லை. ‘லேப்‘பில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என்பது உறுதியானால் நான் நேரடியாக அங்கு செல்வேன். என்னோடு வருபவர்கள் யார்? இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.46 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.46- கோடியாக உயர்ந்துள்ளது.
2. ஒரே முறை செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பூசிக்கு சீனா நிபந்தனைகளுடன் அனுமதி
உலகம் முழுவதும் வியாபித்துள்ள கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டறிந்துள்ளன.
3. ஊரடங்கை தவிர்க்க மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்: உத்தவ் தாக்கரே
ஊரடங்கை தவிர்க்க மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்று மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
4. இங்கிலாந்தில் 6 பேருக்கு பிரேசிலில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா
இங்கிலாந்தில் 6 பேருக்கு பிரேசிலில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடக்கம்
தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது.