மன அழுத்தத்தில் இருந்து விடுபட நடிகைகள் யோசனை


மன அழுத்தத்தில் இருந்து விடுபட நடிகைகள் யோசனை
x
தினத்தந்தி 16 Jun 2020 6:19 AM IST (Updated: 16 Jun 2020 6:19 AM IST)
t-max-icont-min-icon

மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதில் இருந்து மீளும்படி நடிகைகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு காரணம் மன அழுத்தம் என்கின்றனர். அவரது வீட்டில் இருந்து மன அழுத்தத்துக்கான மாத்திரைகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த நிலையில் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதில் இருந்து மீளும்படி நடிகைகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நடிகை சுருதிஹாசன் கூறும்போது, “ஊரடங்கில் மன ஆரோக்கியம் முக்கியம், இதில் இருந்து விடுபட தியானம் உதவும்“ என்று கூறியுள்ளார்.

நடிகை அமலாபால் கூறும்போது, “பலர் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் கழிக்கின்றனர். மரணத்தில் நிம்மதியை தேடுகின்றனர். வாழும்போதே நிம்மதியாக வாழ்வதற்கு ஏன் முயற்சி செய்ய கூடாது. இந்த உலகம் உங்களுக்கு அதை கொடுக்க காத்து இருக்கிறது“ என்று கூறியுள்ளார்.

தீபிகா படுகோனே இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மனநல பிரச்சினையில் சிக்கிய அனுபவம் எனக்கு இருக்கிறது. ஒருவருக்கொருவர் தொடர்புடன் இருங்கள். மனம் விட்டு பேசுங்கள். உதவி கேளுங்கள், நீங்கள் தனிப்பட்டவர் இல்லை. ஏதாவது தீர்வு கிடைக்கும்“ என்று கூறியுள்ளார்.

தமிழில் தேரோடும் வீதியிலே படத்தில் நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகை பாயல் கோஷ் கூறும்போது, “நானும் 2015-ல் இருந்து மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளேன். எனக்கு அவ்வப்பொது மரண பயம் வரும். எதை பார்த்தாலும் இறந்து விடுவோனே என்று பயப்படுவேன். இந்த உணர்வு வரும்போதெல்லாம் மருத்துவமனைக்கு சென்று விடுவேன். எனகு குடும்பத்தினரும் நண்பர்களும் ஆதரவாக இருக்கிறார்கள்.” என்றார்.

Next Story