டிக்டாக்’கில் இருந்து விலகல்“சீன பொருட்களை வாங்க மாட்டேன்”-நடிகை சாக்‌ஷி அகர்வால்


டிக்டாக்’கில் இருந்து விலகல்“சீன பொருட்களை வாங்க மாட்டேன்”-நடிகை சாக்‌ஷி அகர்வால்
x
தினத்தந்தி 22 Jun 2020 4:30 AM IST (Updated: 22 Jun 2020 2:25 AM IST)
t-max-icont-min-icon

“சீன பொருட்களை வாங்க மாட்டேன்” என்று நடிகை சாக்‌ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனாவை கண்டிக்கும் வகையில் சீன பொருட்களை வாங்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சீன செயலிகளையும் நீக்கி வருகிறார்கள்.

இதுகுறித்து நடிகை சாக்‌ஷி அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது. எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்தப்போவதில்லை. சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன். இதன் தொடக்கமாக நான் சீன செயலியான எனது டிக்டாக் கணக்கை அகற்றி உள்ளேன். என்னை பொறுத்தவரை எனது நாடுதான் எனக்கு எதிலும் முதன்மையாக தோன்றும்.

என் நாட்டின் கண்ணியத்தை காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதை செய்ய நான் ஒருபோதும் தயங்க மாட்டேன்‘’ என்று குறிப்பிட்டு உள்ளார். சாக்‌ஷி அகர்வால் ரஜினியின் காலா, ராஜாராணி, விசுவாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜி.வி.பிரகாசுடன் ஆயிரம் ஜென்மங்கள், சுந்தர்.சியின் அரண்மனை 3-ம் பாகம், புறவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Next Story