நகைச்சுவை நடிகருக்கு கொரோனா


நகைச்சுவை நடிகருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 Jun 2020 4:30 AM IST (Updated: 22 Jun 2020 2:28 AM IST)
t-max-icont-min-icon

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பந்தளா கணேஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பந்தளா கணேஷ். இவர் மகேஷ் பாபுவின் போக்கிரி, பிசினஸ்மேன், சரிலேரு நேக்கெவ்வரு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பவன் கல்யானின் கபார் சிங், ஜூனியர் என்.டிஆரின் பாட்ஷா, டெம்பர் உள்பட பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்தும் இருக்கிறார். ஐதராபாத்தில் உள்ள திரைப்பட நகரில் வசித்து வருகிறார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தி அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே திரையுலக பிரபலங்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்தி நடிகை மோகனா குமாரி சிங் கொரோனாவில் சிக்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கொரோனா குணமாவதற்கு முன்பே இவரை வீட்டுக்கு அனுப்பி விட்டதாக சர்ச்சைகள் கிளம்பின. பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகி கனிகா கபூர், இந்தி தயாரிப்பாளர் கரோம் மொரானி மற்றும அவரின் மகளும் நடிகையுமான ஷஜா மொரோனி ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.


Next Story