நடிகை நயன்தாராவுக்கு கொரோனாவா? இணைய தளத்தில் பரபரப்பு
கொரோனா பரவல் நாடு முழவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவல் நாடு முழவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரபலங்கள் பலர் வைரஸ் தொற்றில் சிக்கி சிகிச்சை பெறுகிறார்கள். திரையுலகினரையும் கொரோனா தாக்கி உள்ளது. இந்தி நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் கொரோனா அறிகுறியால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிலர் தங்களை தனிமைப்படுத்தி உள்ளனர். வெளிமாவட்டத்துக்கு சென்ற பாரதிராஜா தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் நடிகை நயன்தாரா உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பு தகவல் பரவியது.
நயன்தாராவுக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளது என்றும் இதனால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திகொண்டு இருக்கிறார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த தகவலை சமூக வலைத்தளத்தில் பலர் வைரலாக்கினர். இது பட உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நயன்தாரா தரப்பில் விசாரித்தபோது மறுத்தனர். நயன்தாரா நலமாக இருக்கிறார் என்றும் அவரது உடல் நிலை குறித்து வெளியான தகவல் வதந்தி என்றும் நயன்தாராவின் மக்கள் தொடர்பாளர் குழுவினர் தெரிவித்தனர். நயன்தாரா மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் திரைக்கு வருகிறது. ரஜினிகாந்துடன் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களும் கைவசம் உள்ளன.
Related Tags :
Next Story