சினிமா செய்திகள்

46-வது பிறந்த நாள்:விஜய்யை வாழ்த்திய நடிகர் நடிகைகள் + "||" + Vijay turns 46: Anirudh Ravichander, Atlee, Malavika Mohanan and others wish Thalapathy

46-வது பிறந்த நாள்:விஜய்யை வாழ்த்திய நடிகர் நடிகைகள்

46-வது பிறந்த நாள்:விஜய்யை வாழ்த்திய நடிகர் நடிகைகள்
நடிகர் விஜய்க்கு நேற்று 46வது பிறந்த நாள் ஆகும்.

நடிகர் விஜய்க்கு நேற்று 46வது பிறந்த நாள் ஆகும். கொரோனா பாதிப்பினால் மக்கள் கஷ்டப்படும் சூழ்நிலையில் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதனால் பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

ஆனாலும் சமூக வலைத்தளத்தில் புதிய ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்தனர். விஜய் நடிக்கும் மாஸ்டர் படக்குழுவினர் கொளுத்துங்கடா என்ற வாசகத்துடன் விஜய்யின் புதிய போஸ்டரை வெளியிட்டனர். பூவே உனக்காக, கில்லி, போக்கிரி, துப்பாக்கி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்துள்ள விஜய் கதாபாத்திரங்கள் விஜய்யின் சிலையை செதுக்குவதுபோல் ஒரு போஸ்டரை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் வடிவமைத்து வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. சமூகவலைத்தளத்திலும் வைரலானது. 

நடிகர்கள் விஷால், ஆர்யா, தனுஷ், விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், அருண் விஜய், பிரசன்னா, ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, சிபிராஜ், சூரி, நடிகை நடிகைகள் நயன்தாரா, ராதிகா, குஷ்பு, சிம்ரன், காஜல் அகர்வால், அசின், கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன், ராஷி கன்னா, ரகுல் பிரீத் சிங், மஞ்சிமா மோகன், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், சிம்புத்தேவன், ரத்னகுமார் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளத்தில் விஜய்யை வாழ்த்தி பதிவுகள் வெளியிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரபல நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
2. விஜய் பட நடிகை மாளவிகா மோகனன் சம்பளம் ரூ. 5 கோடி ?
தற்போது விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.
3. நடிகர் விஜயின் மாஸ்டர் டிரைலர் மரண மாஸாக இருக்கும் - நடிகர் அர்ஜூன் தாஸ்
நடிகர் விஜயின் மாஸ்டர் டிரைலர் மரண மாஸாக இருக்கும் என நடிகர் அர்ஜூன் தாஸ் கூறி உள்ளார்.
4. ரசிகர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக ரூ 5000 செலுத்திய நடிகர் விஜய்!
நடிகர் விஜய் அவரது ரசிகர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
5. நடிகர் விஜய்யின் மகன் விரைவில் தமிழில் கதாநாயகனாக அறிமுகம்?
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழில் விரைவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.