சமந்தாவை சந்தித்த தோழிக்கு கொரோனா


சமந்தாவை சந்தித்த தோழிக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Jun 2020 10:47 PM GMT (Updated: 2020-06-24T04:17:14+05:30)

பிரபல நடிகை சமந்தாவை சந்தித்த தோழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து ஐதராபாத்தில் வசிக்கிறார். கொரோனா ஊரடங்கில் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து புகைப்படங்களையும் பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் மாடி தோட்டத்தில் விவசாயம் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து நானும் விவசாயிதான் என்றார். 4 நாட்களுக்கு முன்பு தனது தோழியும் பிரபல ஆடை வடிவமைப்பாளருமான ஷில்பா ரெட்டி கன்னத்தில் முத்தமிடுவதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டார். அத்துடன் ஷில்பா ரெட்டியின் வளர்ப்பு நாய்களுடன் சமந்தா விளையாடும் வீடியோவும் வெளியானது.

இந்த நிலையில் ஷில்பா ரெட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அவரே தெரிவித்து உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சமந்தா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தோழிக்கு கொரோனா இருப்பதால் அவரை சந்தித்த சமந்தாவுக்கும் நோய் தொற்று தாக்கி இருக்குமோ என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் கவலை தெரிவித்து வருகிறார்கள். காத்துவாக்குல ரெண்டு காதல், மற்றும் அஸ்வின் சரவணன் இயக்கும் திகில் படங்களுக்கு சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் இதன் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.

Next Story