சினிமா செய்திகள்

ராதிகா ஆப்தே இயக்கிய குறும்படத்துக்கு சர்வதேச விருது + "||" + International Award for Short Film directed by Radhika Apte

ராதிகா ஆப்தே இயக்கிய குறும்படத்துக்கு சர்வதேச விருது

ராதிகா ஆப்தே இயக்கிய குறும்படத்துக்கு சர்வதேச விருது
ராதிகா ஆப்தே இயக்கிய குறும்படத்துக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்தவர் ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ‘தி ஸ்லீப் வாக்கர்ஸ்’ என்ற குறும்படத்தை இயக்கி இருந்தார். சஹானா கோஸ்வாமி உள்ளிட்ட சிலர் நடித்து இருந்தனர். தூக்கத்தில் நடக்கும் பிரச்சினைகளை படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார். இந்த குறும்படம் தனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றும் தொடர்ந்து படங்கள் இயக்குவேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் இணைய தளத்தில் சர்வதேச குறும்பட விழா நடந்தது. இதில் ராதிகா ஆப்தேவின் குறும்படம் சிறந்த நள்ளிரவு குறும்படத்துக்கான சர்வதேச விருதை வென்றுள்ளது. இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறும்போது “எனது குறும்படம் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். லண்டனை சேர்ந்த பெனடிக்ட் டெய்லர் என்பவரை காதலித்து மணந்த ராதிகா ஆப்தே தற்போது லண்டனில் வசிக்கிறார். “ஊரடங்கு காரணமாக மக்கள் வெப் தொடர்கள் அதிகம் பார்க்கின்றனர். லண்டன் தெருக்களில் நடந்து சென்றால் என்னை அடையாளம் கண்டு எனது நடிப்பை பாராட்டுகிறார்கள்” என்றார்