சினிமா செய்திகள்

வாரிசு என்பது அவமானம் அல்ல: எதிர்ப்பாளர்களுக்கு நடிகை பதிலடி + "||" + Heir is not a shame: Actress sonam kaboor

வாரிசு என்பது அவமானம் அல்ல: எதிர்ப்பாளர்களுக்கு நடிகை பதிலடி

வாரிசு என்பது அவமானம் அல்ல: எதிர்ப்பாளர்களுக்கு நடிகை பதிலடி
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தி வாரிசு நடிகர் நடிகைகளுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தி வாரிசு நடிகர் நடிகைகளுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பட வாய்ப்புகளை இவர்கள் தடுத்ததாலேயே மன அழுத்தத்தில் சுஷாந்த் சிங் உயிரை மாய்த்தார் என்று கூறப்படுகிறது. வாரிசு நடிகர் நடிகைகளுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பிரசாரம் செய்கின்றனர். நடிகர் சத்ருகன் சிங்காவின் மகளும் நடிகையுமான சோனாக்சி சின்ஹாவையும் கண்டித்து பதிவுகள் வெளியிட்டதால் அவர் டுவிட்டர் பக்கத்தை முடக்கி விட்டு வெளியேறினார்.

பிரபல இந்தி நடிகர் அனில்கபூரின் மகளும் நடிகையுமான சோனம் கபூரின் வலைத்தள பக்கத்திலும் அவருக்கு எதிராக ரசிகர்கள் அவதூறுகள் பதிவிட்டனர். வாரிசு அரசியலால்தான் சோனம் கபூருக்கு பட வாய்புகள் கிடைத்துள்ளன என்றும் வசை பாடினர். 

இதற்கு பதில் அளித்துள்ள சோனம் கபூர், ‘’நான் எனது தந்தையின் மகள்தான். அவரால்தான் இந்த இடம் எனக்கு கிடைத்து இருக்கிறது. விஷேச சலுகையும் பெற்றுள்ளேன். இது அவமானம் இல்லை. பெருமையாகவே நினைக்கிறேன். நான் இந்த இடத்துக்கு வருவதற்கு எனது தந்தை கடுமையாக உழைத்துள்ளார். நான் யாருக்கு பிறந்தேன் என்பது எனது விதி. எனது தந்தைக்கு மகளாக இருப்பதில் பெருமை” என்று கூறியுள்ளார். தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் ராஞ்சனா இந்தி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது.