சினிமா செய்திகள்

விமானத்தில் தன்னை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்- நடிகை ராதிகா ஆப்தே + "||" + Radhika Apte: The last time I stayed in London for so long,

விமானத்தில் தன்னை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்- நடிகை ராதிகா ஆப்தே

விமானத்தில் தன்னை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்- நடிகை ராதிகா ஆப்தே
விமானத்தில் தன்னை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் குறித்து நடிகை ராதிகா ஆப்தே கூறி உள்ளார்.
லண்டன்

தமிழில், டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், கபாலி உட்பட படங்களில் நடித்துள்ள நடிகை ராதிகா ஆப்தே, இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர், லண்டனைச் சேர்ந்த பெனடிக்ட் டெய்லர் என்பவரைக் காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக இப்போது லண்டனில் இருக்கிறார். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து லண்டனில் வசித்து வருகிறார்.தனது லண்டன் அனுபவம் பற்றி கூறிய அவர், ஊரடங்கு காரணமாக மக்கள் வெப்சீரிஸ்களை அதிகம் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள் என நினைக்கிறேன். லண்டன் தெருக்களில் நான் நடந்து சென்றால் என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

இவ்வளவு காலம் லண்டனில் தங்கி இருப்பதும் இதுதான் முதன்முறை. ரசிகர்கள் என்னை நேரில் சந்திக்கும்போது, உங்கள் நடிப்பு நன்றாக இருந்தது என்று சொல்வதையோ பாராட்டுவதையோ வரவேற்கிறேன்.ஆனால், நடுரோட்டில் நின்றுகொண்டு என் பெயரை சொல்லிக் கத்தும்போதும் நான் ஜாக்கிங் செல்லும்போது கவனத்தைத் திசைத் திருப்பும்போதும் கவலையாகி விடுகிறேன்.

ஒருமுறை நான் விமானத்தில் இருந்தபோது, ஒருவர் என்னருகில் வந்து ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றார். நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால் நான் சோர்வாக இருந்தேன். அதனால் நன்றாக அசந்து தூங்கிவிட்டேன். கண்விழித்து பார்த்த போது, அந்த நபர் மீண்டும் போனை என்னை நோக்கி நீட்டியபோது அதிர்ச்சி அடைந்துவிட்டேன் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் ராகுல் பிரித்தி சிங் ...சரிவருமா...?
தெலுங்கில் உருவாகவுள்ள கர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
2. நடிகர் சுஷாந்த் சிங் கொலை வழக்கு: காதலி ரியோ சக்கரபோர்த்தி உள்பட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு
நடிகர் சுஷாந்த் சிங் கொலை வழக்கில் காதலி ரியோ சக்கரபோர்த்தி உள்பட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது.
3. பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க- நடிகர் சூர்யா
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா கூறி உள்ளார்.
4. நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் - இர்பான் பதான்
நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் என கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்து உள்ளார்.
5. யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்று அல்லு அர்ஜுன் படம் சாதனை
இந்தியாவிலேயே முதல்முறையாக யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்ற அல்லு அர்ஜுன் படம்