சினிமா செய்திகள்

இந்திக்கு போகும் சூர்யா படம் + "||" + Surya movie going to Hindi

இந்திக்கு போகும் சூர்யா படம்

இந்திக்கு போகும் சூர்யா படம்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரை போற்று‘. அபர்ணா முரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராப் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரை போற்று‘. அபர்ணா முரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராப் ஆகியோரும் படத்தில் உள்ளனர். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து கொரோனா ஊரடங்கினால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த படம் இணைய தளத்தில் வெளியாகலாம் என்ற தகவல் பரவியது. இதனை மறுத்த படக்குழுவினர் தியேட்டரில் தான் ரிலீசாகும் என்று உறுதி அளித்துள்ளனர்.

இந்த நிலையில் சூரரை போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பிரபல மும்பை பட நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தி பதிப்பில் சூர்யா கதாபாத்திரத்தில் ஷாகித் கபூர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஷாகித் கபூர் தெலுங்கு அர்ஜூன் ரெட்டியின் இந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூல் பார்த்தது. தற்போது நானி நடிப்பில் வெளிவந்த ஜெர்ஸி என்ற இன்னொரு தெலுங்கு படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் இந்தியில் சூரரை போற்று பட வேலைகள் தொடங்கும் என்று தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. தனது நடிப்பை விமர்சிக்கும் சூர்யா
நான் 20 வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் இருக்கிறேன். ஆனாலும் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் இருக்கிறது.
2. திருட்டு இணையதளத்தில் சூர்யாவின் ‘சூரரை போற்று’ முழு படமும் வெளியானது - படக்குழுவினர் அதிர்ச்சி
திருட்டு இணையதளத்தில் சூர்யாவின் சூரரை போற்று முழு படமும் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.