சினிமா செய்திகள்

இணைய தளத்தில்வெளியாகும் வரலட்சுமி, யோகிபாபு படங்கள் + "||" + Varalakshmi and Yogibabu films will be released on website

இணைய தளத்தில்வெளியாகும் வரலட்சுமி, யோகிபாபு படங்கள்

இணைய தளத்தில்வெளியாகும் வரலட்சுமி, யோகிபாபு படங்கள்
கொரோனாவால் திரையுலகம் முடங்கி உள்ளது. இதனால் புதிய படங்களை தியேட்டருக்கு பதிலாக இணைய தளத்தில் வெளியிடுகிறார்கள்

கொரோனாவால் திரையுலகம் முடங்கி உள்ளது. இதனால் புதிய படங்களை தியேட்டருக்கு பதிலாக இணைய தளத்தில் வெளியிடுகிறார்கள். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் ஏற்கனவே டிஜிட்டல் தளத்தில் வெளியானது. கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட்டனர். டெல் கணேசன் தயாரிப்பில் நெப்போலியன் நடித்துள்ள ‘டெவில்ஸ் நைட்‘ படமும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள டேனி படம் இணைய தளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் சற்குணத்தின் உதவியாளர் சாந்த மூர்த்தி டைரக்டு செய்துள்ளார்.

இதில் வரலட்சுமி போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். கொலையாளிகள் மூன்று பேரை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது கதை. ஆகஸ்டு மாதம் யோகிபாபு நடித்துள்ள காக்டெயில் படமும் இணைய தளத்தில் வெளியாக உள்ளது. படங்களை இணையதளத்தில் வெளியிட தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதையும் மீறி டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து படங்கள் ரிலீசாகின்றன. அருண் விஜய்யின் ‘வா டீல்,‘ ‘மம்மி சேவ்‘, ‘அண்டாவ காணோம்‘ ஆகிய மேலும் 3 படங்கள் இணைய தளத்தில் வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.08 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7.28 கோடியாக உயர்ந்துள்ளது.
2. ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கியது
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 37.38 லட்சத்தைக் கடந்துள்ளது.
3. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7.17 கோடியாக உயர்ந்துள்ளது
4. பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி உதவி; இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு
கொரோனா தடுப்பூசி மருந்துகளை பல நாடுகளுக்கு வழங்கி இந்தியா உதவி செய்து வருவதற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்து உள்ளது.
5. சேலம் பிளஸ்-2 மாணவிக்கு கொரோனா: கோவையில் மாணவர்களின் பாதுகாப்புக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்
சேலத்தில் பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.