கொரோனா பரவலை தடுக்க அஜித் யோசனை


கொரோனா பரவலை தடுக்க அஜித் யோசனை
x
தினத்தந்தி 27 Jun 2020 12:00 AM GMT (Updated: 26 Jun 2020 10:28 PM GMT)

கொரோனா பரவலை தடுக்க அஜித் யோசனை தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு மீண்டும் சில மாவட்டங்களில் ஊரடங்கை பிறப்பித்து உள்ளது. தமிழகம் முழுவதும் வைரஸ் தொற்று அதிகம் உள்ள பகுதிகளை சிவப்பு மண்டலமாக அறிவித்து தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர். அங்கு வசிப்பவர்கள் வெளியே செல்லவும் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் கொரோனா பரவல் அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளித்தால் வைரசை அழிக்க முடியும் என்று யோசனை தெரிவித்துள்ளார். 

அஜித் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைகழகத்தை சேர்ந்த தக்‌ஷா குழுவினர் உருவாக்கிய ட்ரோன்கள் ஏற்கனவே இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் முதல் இடம் பெற்றன. ஆஸ்திரேலியாவிலும் பரிசு வென்றது. இந்த ட்ரோன்களை வைத்து கொரோனா பரவல் அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தால் வைரசை கட்டுப்படுத்தலாம் என்றும் இந்த ட்ரோன்கள் 30 நிமிடத்தில் 16 லிட்டர் கிருமி நாசினியை தெளித்து விடும் திறன் கொண்டவை என்றும் அஜித்குமார் கூறியுள்ளார். இது நல்ல யோசனையாக இருந்ததால் உடனடியாக அமல்படுத்தி ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள். அஜித் கொடுத்த யோசனையை வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Next Story