சினிமா செய்திகள்

மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுநடிகர் சத்யராஜ் மகள் வழங்குகிறார் + "||" + Food that makes people immune Actor Sathyaraj's daughter presents

மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுநடிகர் சத்யராஜ் மகள் வழங்குகிறார்

மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுநடிகர் சத்யராஜ் மகள் வழங்குகிறார்
வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவை நடிகர் சத்யராஜ் மகள் வழங்குகிறார்.
சென்னை,

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். இவர் மதிய உணவு திட்டமான அக்‌ஷய பாத்திராவின் விளம்பர தூதுவராகவும் இருக்கிறார். அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு உள்ள இரும்புச்சத்து குறைபாடுகளை போக்கவேண்டும் என்று திவ்யா சத்யராஜ், சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும் இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று விவசாய அமைச்சரிடம் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். விரைவில் அவர் புது இயக்கத்தை தொடங்க இருக்கிறார்.


இதுகுறித்து திவ்யா சத்யராஜ் கூறுகையில், தமிழகத்தில் குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில் ஒரு இயக்கம் ஆரம்பிக்க இருக்கிறேன். வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களும் கொரோனாவில் இருந்து பாதுகாக்கப்படவேண்டும். அதற்கு அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவு தேவை. நான் தொடங்கும் இயக்கம், தொண்டு செய்ய விரும்பும் இளைஞர்களின் துணையோடு அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவை இலவசமாக வழங்கும். இதற்கான முயற்சிகளை என்னுடைய இயக்கம் விரைவில் தொடங்கும் என்றார்.