சினிமா செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம்: காவலர்களை போற்றி 5 படங்கள் எடுத்ததற்கு வேதனைபடுகிறேன் - இயக்குனர் ஹரி கருத்து + "||" + The Sathankulam incident Praising the cops I am in pain for taking 5 movies Director Hari commented

சாத்தான்குளம் சம்பவம்: காவலர்களை போற்றி 5 படங்கள் எடுத்ததற்கு வேதனைபடுகிறேன் - இயக்குனர் ஹரி கருத்து

சாத்தான்குளம் சம்பவம்: காவலர்களை போற்றி 5 படங்கள் எடுத்ததற்கு வேதனைபடுகிறேன் - இயக்குனர் ஹரி கருத்து
காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்கு மிகவும் வேதனைப்படுவதாக இயக்குனர் ஹரி .கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். 

 பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இயக்குனர் ஹரி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்கு மிகவும் வேதனைப்படுவதாகவும் காவல்துறையில் உள்ள சிலரின் அத்துமீறலால் ஒட்டுமொத்த துறைக்குமே களங்கம் ஏற்பட்டுள்ளது என்றும் இனி இது போன்ற ஒரு கொடூர சம்பவம் தமிழகத்தில் நடக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் சம்பவம், ‘ஹாலிவுட்’ படமாகிறது; நெப்போலியன் - ஜீ.வி.பிரகாஷ் நடிக்கின்றனர்
நெப்போலியன் - ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் சாத்தான்குளம் சம்பவம், ஹாலிவுட்டில் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. சாத்தான்குளம் சம்பவம்: தந்தை - மகன் உடலில் 30 இடங்களில் காயங்கள்; நீதிபதி தகவல்
சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததாக தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதி, போலீஸ்காரர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
3. தந்தை-மகன் உடலை பிரேத பரிசோதனை செய்த நெல்லை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் விசாரணை - மனித உரிமை ஆணையம் நடவடிக்கை
சாத்தான்குளம் தந்தை, மகன் உடல்களை பிரேத பரிசோதனை செய்த நெல்லை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் மனித உரிமை ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது.
4. சாத்தான்குளம் வழக்கு: அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சி.பி.ஐ. திங்கள்கிழமை மனு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கையில் சிபிஐ தீவிரமாக இறங்கியுள்ளது.
5. சாத்தான்குளம் அருகே 8 வயது சிறுமி கொலை வழக்கில், உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
சாத்தான்குளம் அருகே 8 வயது சிறுமி கொலை வழக்கில், உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.