சினிமா செய்திகள்

கொரோனாவால் கருவாடு வியாபாரியான நடிகர் + "||" + Actor became dry fish dealer due to corona

கொரோனாவால் கருவாடு வியாபாரியான நடிகர்

கொரோனாவால் கருவாடு வியாபாரியான நடிகர்
கொரோனா ஊரடங்கால் நடிகர் ஒருவர் கருவாடு வியாபாரியாக மாறி இருக்கிறார்.
கொரோனா ஊரடங்கினால் பட உலகம் 3 மாதங்களுக்கு மேலாக முடங்கி உள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் வருமானம் இன்றி கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு பெப்சி அமைப்பு நிதி திரட்டி உதவி வருகிறது. திரையுலகினர் பலர் வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள். இந்தி நடிகர் சோலங்கி திவாகர் டெல்லியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்யும் புகைப்படம் வெளியானது. தமிழில் ஒரு மழை நான்கு சாரல், மவுன மழை, பாரதிபுரம், நானும் ஒரு பேய்தான் ஆகிய படங்களை இயக்கி உள்ள டைரக்டர் ஆனந்த் சென்னை முகலிவாக்கத்தில் மளிகை கடை திறந்துள்ளார்.


தற்போது இன்னொரு நடிகர் மீன் வியாபாரியாக மாறி இருக்கிறார். அவரது பெயர் ரோஹன் பட்னேகர். இவர் பிரபல மராத்தி நடிகர் ஆவார். சில படங்களுக்கு கதை திரைக்கதையும் எழுதி இருக்கிறார். பாபாசாகேப் அம்பேத்கர் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து மேலும் பிரபலமானவர்.

ரோஹன் பட்னேகர் கருவாடு விற்கும் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகிறது. அவர் கூறும்போது, “இப்போதைக்கு பட பிடிப்புகள் தொடங்கும் என்ற நம்பிக்கை இல்லை. மன அழுத்தம் ஏற்பட்டது. தற்கொலை உணர்வும் வந்தது. குடும்பத்தினர் எனது வருமானத்தில் வாழ்ந்ததால் வேறு வழியில்லாமல் கருவாடு வியாபாரம் செய்கிறேன், வயிற்று பசிக்கு நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று தெரியாது” என்றார்.