‘கோப்ரா’ படத்தில் 20 விதமான தோற்றங்களில், விக்ரம்!


‘கோப்ரா’ படத்தில் 20 விதமான தோற்றங்களில், விக்ரம்!
x
தினத்தந்தி 3 July 2020 12:24 PM IST (Updated: 3 July 2020 12:24 PM IST)
t-max-icont-min-icon

‘கோப்ரா’ படத்தில் விக்ரம் 20 விதமான தோற்றங்களில் தோன்றுகிறார்.

விக்ரம் நடித்து வரும் ‘கோப்ரா’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இது, அவருடைய 58-வது படம். இதில், 20-க்கும் மேற்பட்ட தோற்றங்களில் விக்ரம் தோன்றுகிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். பெங்களூரைச் சேர்ந்த இவர், ‘கே.ஜி.எப்’ என்ற படத்தில் நடித்து பிரபலமானவர். ‘கோப்ரா’ படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டன.

இந்தப் படத்தை முழுவதுமாக முடித்துக் கொடுத்து விட்டு, ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள விக்ரம் திட்டமிட்டு இருந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது.

அதனால், ‘கோப்ரா’ படத்தை முதலில் முடித்துக் கொடுப்பது என்று விக்ரம் முடிவு செய்து, ரஷியாவில் நடைபெற இருக்கும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில், ‘கோப்ரா’ படத்தில் இடம்பெறும் ‘தும்பி துள்ளல்’ என்ற பாடல் முதன்முதலாக வெளியிடப்பட்டது.

விக்ரம் நடித்துவரும் இந்த படத்தை, ‘டிமாண்டி காலனி,’ ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, டைரக்டு செய்கிறார். லலித்குமார் தயாரிக்கிறார்.

Next Story