ஹெலிகாப்டரில் பயணம் செய்யஅக்ஷய்குமாருக்கு அனுமதி அளித்தது குறித்து போலீஸ் விசாரணைமராட்டிய மந்திரி உத்தரவு + "||" + To travel by helicopter
Police investigate Akshay Kumar's sanction
ஹெலிகாப்டரில் பயணம் செய்யஅக்ஷய்குமாருக்கு அனுமதி அளித்தது குறித்து போலீஸ் விசாரணைமராட்டிய மந்திரி உத்தரவு
கொரோனா ஊரடங்கு காலத்தில் நடிகர் அக்ஷய்குமார் ஹெலிகாப்டரில் செல்ல அனுமதி அளித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மும்பை,
பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார், டாக்டரை சந்திக்கப்போவதாக சிறப்பு அனுமதி பெற்று மும்பையில் இருந்து நாசிக்கிற்கு ஹெலிகாப்டரில் சென்றார். அங்குள்ள சொகுசு விடுதியில் தங்கினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் ஹெலிகாப்டரில் செல்ல அனுமதி அளித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து மராட்டிய உணவுத்துறை மந்திரி ஷாகன் புஜ்பால் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘அக்ஷய்குமாரின் ஹெலிகாப்டர் பயணம் ஊடகங்கள் மூலம் தான் எனக்கு தெரியும். அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். அவருக்கு யார் சிறப்பு அனுமதி கொடுத்தது?. ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதிகாரிகள் தான் பொறுப்பு’ என்று தெரிவித்தார்.