சினிமா செய்திகள்

ரூ.30 கோடியில் உருவான ‘சூரரை போற்று’ சூர்யா படம் ரூ.55 கோடிக்கு வியாபாரம் + "||" + Surya film is worth Rs 55 crores

ரூ.30 கோடியில் உருவான ‘சூரரை போற்று’ சூர்யா படம் ரூ.55 கோடிக்கு வியாபாரம்

ரூ.30 கோடியில் உருவான ‘சூரரை போற்று’ சூர்யா படம் ரூ.55 கோடிக்கு வியாபாரம்
சூர்யா நடித்துள்ள ‘சூரரை போற்று’ படம் ரூ.55 கோடிக்கு வியாபாரமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
சூர்யா நடித்து அடுத்து திரைக்கு வரயிருக்கும் படம், ‘சூரரை போற்று.’ அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்து இருக்கிறார். சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார். இது, ஒரு வரலாற்று கதை. உண்மை சம்பவங்கள் திரைக்கதையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று சூர்யா நம்பிக்கையுடன் இருக்கிறார். ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து படத்தை தயாரித்து இருக்கிறார். படத்தின் தயாரிப்பு செலவு ரூ.30 கோடி என்றும், அதன் தமிழ்நாட்டு உரிமை மட்டும் ரூ.55 கோடிக்கு வியாபாரமாகி இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆந்திரா, கேரளா மற்றும் டி.வி. உரிமை இன்னும் விற்கப்படவில்லை என்கிறார்கள். இந்த படம், ஓ டி டி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்று முதலில் பேசப்பட்டது. இப்போது, தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து ஏற்புடையது- சீமான் பேட்டி
நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து ஏற்புடையது. அவருக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
2. கொரோனாவால் சூர்யாவின் ‘அருவா’ படம் கைவிடப்பட்டதா?
கொரோனாவால் சூர்யாவின் ‘அருவா’ படம் கைவிடப்பட்டதா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
3. ‘வாடிவாசல்’ படத்தில் 2 வேடங்களில் சூர்யா?
‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா இருவேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
4. இந்திக்கு போகும் சூர்யா படம்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரை போற்று‘. அபர்ணா முரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராப் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.