சுரேஷ் கோபி படத்துக்கு கோர்ட்டு தடை


சுரேஷ் கோபி படத்துக்கு கோர்ட்டு தடை
x
தினத்தந்தி 6 July 2020 6:17 AM GMT (Updated: 6 July 2020 6:19 AM GMT)

சுரேஷ் கோபி படத்துக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சுரேஷ் கோபி. இவர் தமிழில் அஜித்தின் தினா, சரத்குமாருடன் சமஸ்தானம், ஷங்கர் இயக்கிய ஐ உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருக்கிறார்.

விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்திலும் நடித்துள்ளார். கேரள அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது புதுமுக இயக்குனர் மாத்யூஸ் இயக்கும் படத்தில் சுரேஷ் கோபி நடித்து வருகிறார். இது அவருக்கு 250-வது படம் ஆகும். சில தினங்களுக்கு முன்பு படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டனர்.

அதை பார்த்த மலையாள இயக்குனர் ஜினு அப்ரகாம் தனது திரைக்கதையில் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் பிரிதிவிராஜ் நடித்து வரும் கடுவா படத்தின் டிரெய்லரைப்போல் இருப்பதாக குற்றம் சாட்டினார். தனது கதையை திருடி விட்டதாக கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து சுரேஷ் கோபி படத்துக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. ஜினு அப்ரகாம் கூறும்போது, “சுரேஷ்கோபி படத்தை இயக்கும் மாத்யூஸ் பல வருடம் என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். கடுவா படத்தின் கதையை அவரிடம் சொல்லி இருக்கிறேன்.

சுரேஷ் கோபியை வைத்து அவர் இயக்கும் படத்தின் கதை கடுவா சாயலில் உள்ளதால் வழக்கு தொடர்ந்தேன்” என்றார்.

Next Story