சினிமா செய்திகள்

கமல் மகளா இவர்? வைரலாகும் எஸ்தர் புகைப்படம் + "||" + She is the daughter of Kamal? Esther photo is viral

கமல் மகளா இவர்? வைரலாகும் எஸ்தர் புகைப்படம்

கமல் மகளா இவர்? வைரலாகும் எஸ்தர் புகைப்படம்
பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்தவர் எஸ்தர். அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெற்றிகரமாக ஓடிய திரிஷ்யம் படம் 2015-ல் கமல்ஹாசன் நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்தவர் எஸ்தர். திரிஷ்யம் படத்திலும் மோகன்லால் மகளாக இவரே நடித்து இருந்தார். மேலும் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக வந்தார். தொடர்ந்து பள்ளியில் படித்து கல்லூரியிலும் சேர்ந்தார். இந்த நிலையில் தற்போது எஸ்தர் புடவையில் இருக்கும் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் வளர்ந்து ஆளே மாறிப்போய் இருக்கிறார். கதாநாயகி வாய்ப்புக்காக இந்த புகைப்படங்களை வலைத்தளத்தில் அவர் பகிர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமல் மகளாக நடித்தவரா? இவர் இப்படி வளர்ந்து விட்டாரே என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். எஸ்தர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தற்போது எஸ்தரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய பலர் பேசி வருகின்றனர்.