சினிமா செய்திகள்

‘வாடிவாசல்’ படத்தில் 2 வேடங்களில் சூர்யா? + "||" + Suriya in 2 roles in Vaadivasal

‘வாடிவாசல்’ படத்தில் 2 வேடங்களில் சூர்யா?

‘வாடிவாசல்’ படத்தில் 2 வேடங்களில் சூர்யா?
‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா இருவேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே, காப்பான் ஆகிய 2 படங்கள் வந்தன. தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கொரோனா ஊரடங்கினால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

தற்போது அருவா, வாடிவாசல் ஆகிய 2 புதிய படங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ளார். அருவா படத்தை ஹரி இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் ஆறு, வேல் மற்றும் சிங்கம் 3 பாகங்கள் வந்துள்ளன.

வேல் படத்தை போலவே அருவா கிராமத்து கதையம்சத்தில் தயாராகிறது. ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். ‘வாடிவாசல்’ படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். தனுசை வைத்து இவர் இயக்கி திரைக்கு வந்த அசுரன் படம் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. வாடிவாசல் படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராகிறது. மெரினா போராட்டம் மூலம் உலக அளவில் பிரபலமான ஜல்லிக்கட்டு படத்தில் சூர்யா நடிப்பதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சூர்யா தந்தை, மகனாக இருவேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அருவா படத்தை முடித்து விட்டு வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருட்டு இணையதளத்தில் சூர்யாவின் ‘சூரரை போற்று’ முழு படமும் வெளியானது - படக்குழுவினர் அதிர்ச்சி
திருட்டு இணையதளத்தில் சூர்யாவின் சூரரை போற்று முழு படமும் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
2. நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து ஏற்புடையது- சீமான் பேட்டி
நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து ஏற்புடையது. அவருக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
3. கொரோனாவால் சூர்யாவின் ‘அருவா’ படம் கைவிடப்பட்டதா?
கொரோனாவால் சூர்யாவின் ‘அருவா’ படம் கைவிடப்பட்டதா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
4. ரூ.30 கோடியில் உருவான ‘சூரரை போற்று’ சூர்யா படம் ரூ.55 கோடிக்கு வியாபாரம்
சூர்யா நடித்துள்ள ‘சூரரை போற்று’ படம் ரூ.55 கோடிக்கு வியாபாரமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
5. இந்திக்கு போகும் சூர்யா படம்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரை போற்று‘. அபர்ணா முரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராப் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.