சினிமா செய்திகள்

ராம்கோபால்வர்மாவின் அடுத்த திரைப்படம் 'திரில்லர்'; நாயகி அப்சரா ராணி புகைப்படங்கள் + "||" + Odisha’s Apsara Rani In RGV’s Next Bollywood ‘Thriller’

ராம்கோபால்வர்மாவின் அடுத்த திரைப்படம் 'திரில்லர்'; நாயகி அப்சரா ராணி புகைப்படங்கள்

ராம்கோபால்வர்மாவின் அடுத்த திரைப்படம் 'திரில்லர்'; நாயகி அப்சரா ராணி புகைப்படங்கள்
ராம்கோபால் வர்மாவின் அடுத்த கிளு கிளுப்பு திரைப்படம் ’திரில்லர்’ எனவும் படத்தின் நடிகை அப்சரா ராணி எனவும் அறிமுகம் செய்துள்ளார்.
ஐதராபாத்

கொரானோ ஊரடங்கால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர். இருந்தாலும், இயக்குனர் ராம்கோபால் வர்மா இணையதளங்களில் படங்களை வெளியிடுவதில் மும்முரமாய் இருக்கிறார். அது, சாதாரணப் படங்கள் அல்ல ஆபாசப்படங்கள். 

இப்படியும் கூட ஒரு இயக்குனர், தயாரிப்பாளர் நினைத்தால் பணம் சம்பாதிக்க முடியும் என 'கிளைமாக்ஸ், நேக்டு நங்கா நக்னம்' (CLIMAX and NAKED) என இரண்டு படங்களை வெளியிட்டார். அடுத்து 'திரில்லர்' என்ற ஆபாசப்படத்தை ஆரம்பித்துவிட்டார் ராம்கோபால் வர்மா. இது குறித்து அவர் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், "எங்கள் அடுத்தப்படத்தின் கதாநாயகி இவர்தான். அப்சரா ராணி. இத்திரைப்படத்திற்கு திரில்லர் என பெயர் வைத்திருக்கிறோம். க்ளைமாக்ஸ், நேக்கட் படங்களின் வெற்றியை தொடர்ந்து, இத்திரைப்படம் உருவாகவுள்ளது" என அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அப்சராவைச் சந்திப்பதற்கு முன்பு, 1999  ஒரிசாவில்சூறாவலை உருவாது பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்..ஆனால், இப்போது அபசராவை  சந்தித்தபின், ஒரிசா அனைத்து வகையான சூறாவளிகளையும் உருவாக்குகிறது என்பதை உணர்ந்தேன்..ஒரிசாவில் இதுபோன்ற அழகானவர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு பெரிய வெளிப்பாடாகும் என ராம்கோபால்வர்மா கூறி உள்ளார். 
இந்தப் படத்தில் ஒடிசா பெண்ணான அப்சரா ராணி என்பவரை அறிமுகம் செய்ய உள்ளார். அவரது ஆபாசமான புகைப்படங்கள் பலவற்றை நேற்றே தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டார் வர்மா. நேற்று மாலை அப்சரா ராணி டுவிட்டர் கணக்கை அறிமுகம் செய்துள்ளார். அதற்குள் அவரை 20 ஆயிரம் பின்தொடர்பவர்களை பெற்றுள்ளார்.

"அப்சரா ராணி ஒடிசாவைச் சேர்ந்தவர், தற்போது ஹைதராபாத்தில் வசிக்கிறார் .. அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர் ஆவார். அவரது புகைப்படங்கள் எல்லாம அம்மாடி,,,யோவ் ...!!! ரகங்களாகத்தான் உள்ளது.

தன் டுவிட்டரில் ஒரு ஆபாச கோணத்தில் எடுத்த புகைப்படத்தையும் நள்ளிரவில் வெளியிட்டார். அதைப் பார்த்த வர்மா இந்த நேரத்தில் இந்தப் புகைப்படத்தை எடுத்தது யார் எனக் கேட்டார். 'எனது அம்மா தான், அவர் ஒரு சிறந்த போட்டோகிராபர்' எனப் பதிலளித்துள்ளார் அப்சரா.


தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சுஷாந்த் சிங் கொலை வழக்கு: காதலி ரியோ சக்கரபோர்த்தி உள்பட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு
நடிகர் சுஷாந்த் சிங் கொலை வழக்கில் காதலி ரியோ சக்கரபோர்த்தி உள்பட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது.
2. பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க- நடிகர் சூர்யா
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா கூறி உள்ளார்.
3. நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் - இர்பான் பதான்
நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் என கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்து உள்ளார்.
4. யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்று அல்லு அர்ஜுன் படம் சாதனை
இந்தியாவிலேயே முதல்முறையாக யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்ற அல்லு அர்ஜுன் படம்
5. துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டேன் - பிரபல நடிகை
துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுவதாக நடிகை அக்‌ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.