சினிமா செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட பிரபல இளம் நடிகர் - சோகத்தில் திரையுலகினர் + "||" + Television actor Susheel Gowda dies by suicide

தற்கொலை செய்து கொண்ட பிரபல இளம் நடிகர் - சோகத்தில் திரையுலகினர்

தற்கொலை செய்து கொண்ட பிரபல இளம் நடிகர் - சோகத்தில் திரையுலகினர்
டிவி நடிகர் சுஷீல் கவுடா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு

கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் சுஷீல் கவுடா. அந்தபுரா என்ற தொடர் இவரை மக்களிடம் பிரபலமடையச் செய்தது. நடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார். 30 வயதாகும் இவர் மாண்டியாவில் வசித்து வந்தார்.

நேற்று சுஷீல் கவுடா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  அவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

சுஷீல் கவுடா காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சலாகா என்ற திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. துனியா விஜய் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். சுஷீல் மரணம் குறித்து தனது ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டிருக்கும் துனியா விஜய், அவரை நான் முதலில் பார்த்தபோது நல்ல ஹீரோவாக வருவார் என்று நினைத்தேன். 

படம் வெளியாவதற்குள் எங்களை விட்டுச் சென்றுவிட்டார். என்ன பிரச்சினைகள் இருந்தாலும் தற்கொலை தீர்வாகாது. தொடர் மரணங்கள் இந்த ஆண்டு முடிவடையாது என்று நினைக்கிறேன். கொரோனா காலத்தில் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.” என்று நீண்ட பதிவை வெளியிட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க- நடிகர் சூர்யா
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா கூறி உள்ளார்.
2. நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் - இர்பான் பதான்
நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் என கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்து உள்ளார்.
3. யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்று அல்லு அர்ஜுன் படம் சாதனை
இந்தியாவிலேயே முதல்முறையாக யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்ற அல்லு அர்ஜுன் படம்
4. துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டேன் - பிரபல நடிகை
துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுவதாக நடிகை அக்‌ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.
5. திருமணம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை - நடிகை ஓவியா
திருமணம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என நடிகை ஓவியா கூறி உள்ளார்.