சினிமா செய்திகள்

மகனுடன் படகு சவாரி சென்ற நடிகை மாயம்; தற்கொலை செய்திருக்கலாம் என அச்சம் + "||" + Glee star Naya Rivera feared dead after son, 4, found alone on boat floating on lake

மகனுடன் படகு சவாரி சென்ற நடிகை மாயம்; தற்கொலை செய்திருக்கலாம் என அச்சம்

மகனுடன் படகு சவாரி சென்ற நடிகை மாயம்; தற்கொலை செய்திருக்கலாம் என அச்சம்
4 வயது மகனுடன் படகு சவாரி சென்ற நடிகை மாயம்; தற்கொலை செய்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கலிபோர்னியா

பிரபல டிவி நட்சத்திரம் நயா ரிவேரா நேற்று தனது 4 வயது மகனுடன் படகு சவாரி சென்றார்.அவர் இன்றுவரை திரும்பாததால் அவர் இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அவரது நான்கு வயது மகன் ஜோசி டோர்சின் யுட் கலிபோர்னியாவின்  ஏரியில் வாடகை படகில் தனியாக சவாரி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் கரை திரும்பவில்லை. இதையடுத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சிறிது நேரத்தில் அவரது மகன் கண்டுபிடிக்கப்பட்டார்.

சிறுவன்  தனது அம்மா "தண்ணீரில் குதித்தார், ஆனால் மீண்டும் மேலே வரவில்லை" என்று போலீசாரிடம் கூறினார்.

ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானம் மற்றும் டைவ் குழுக்களைப் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கை நடைபெற்ற விடிய விடிய நடந்த தேடுதலில் ஒருதகவலும் கிடைக்கவில்லை. இன்று காலை முதல் தேடுதல் வேட்டை நடந்து வந்தது. ஆனால் ஒருதகவலும் கிடைக்கவில்லை.

அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அதிரடி கதாநாயகியாக உருவாகும் கங்கனா ரனாவத்; தீவிர சண்டை பயிற்சி
அடுத்தடுத்து நடிக்கும் 2 ஆக்சன் திரைப்படங்களுக்காக தீவிர சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோவை நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ளார்.
2. "எவனென்று நினைத்தாய்" கமல்ஹாசன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்
கமல்ஹாசன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்திற்கு "எவனென்று நினைத்தாய்" என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
3. நடிகர் சுஷாந்த் சிங் மரணம்: காதலியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில், அவரது காதலியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
4. நகைச்சுவை நடிகர்‘கும்கி’ அஸ்வின் காதல் திருமணம்- பட்டதாரி பெண்ணை மணக்கிறார்
கும்கி’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர், அஸ்வின்.
5. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் நிறைவேறாத ஆசைகள்
நடிகர் சுஷாந்த் சிங்கிற்கும் வாழ்வில் 50 ஆசைகள் இருந்துள்ளது. ஆனால் அவை முழுமையாக நிறைவேறுவதற்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.